• Thu. Apr 24th, 2025

“எல்லோருக்கும் எல்லாம்” திட்டங்களை நிறைவேற்றும் முதல்வர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற திமுக வடக்கு மற்றும் தெற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையில் “எல்லோருக்கும் எல்லாம்” திட்டங்களை நிறைவேற்றும் முதல்வரை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர திமுக சார்பில், நகர நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ ஆலோசனையின் பேரில், கம்பம் காமாட்சி அம்மன் கோவில் மண்டப வளாகத்தில் தெற்கு நகர அவைத்தலைவர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் குரு குமரன் முன்னிலை வகித்தார். கம்பம் தெற்கு நகர செயலாளர் சி. பால்பாண்டி ராஜா விளக்க உரையாற்றினார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரா. பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அதிபன், இலக்கிய அணி அமைப்பாளர் அலாவுதீன், கடக பேச்சாளர்கள் பாண்டித்துரை, முருகேசன் உரையாற்றினர். கூட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் 2024- 25 க்கான நிதிநிலை அறிக்கையில் “எல்லோருக்கும் எல்லாம்” கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும், தலைமை கழக உத்தரவுப்படி வாக்காளர்களை அணுகி அவரது வாட்ஸ்ஆப் எண்களை பெற்று திமுக இணையதள குழுக்களில் இணைப்பது உள்ளிட்ட திருமணங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கம்பம் தெற்கு நகர திமுக தொண்டர்களும் பொறுப்பாளர்களும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்.

அதுபோல், கம்பம் வடக்கு நகர் திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் கம்பமெட்டுச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்பம் வடக்கு நகரச் செயலாளர்கள் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரா.பாண்டியன் , மாநில செயற்குழு உறுப்பினர் குரு.குமரன், இளைஞரணி துணை அமைப்பாளர் கராத்தே இராமகிருஷ்ணன், தேனி தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அலாவுதீன், கழக பேச்சாளர் பாண்டித்துரை, தொண்டரணி அமைப்பாளர் கம்பம் சாதிக், நகர அவைத்தலைவர் அஜீஸ் அம்பா, துணைச் செயலாளர்கள் சுருளி, சஹானா சாதிக், பொருளாளர் சோமசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் ஜெகதீசன், சரவணன் ,சொக்க ராஜா, மாவட்டத் துணை அமைப்பாளர்கள் மொக்கைபாலு, தமிழ்மாறன், சதக்துல்லா, தங்கராஜ், முருகேசன் , ஜெயபிரகாஷ் கழக பேச்சாளர் முருகேசன், திமுக நிர்வாகி பவர் சாதிக், அனுமந்தன் பட்டி பேரூர் கழக செயலாளர் கே.ராஜ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தேனி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அதிபன்ராஜ் பேசும் போது, தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் அரசின் திட்டங்கள், சாதனைகளை எடுத்து செல்வது குறித்தும், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் வாட்சப் சேனலை பின் தொடர்வது குறித்து செயல் முறை விளக்கம் காண்பித்தார். இதில் கவுன்சிலர்கள் சுல்தான் சல்மான் பார்சி, சுந்தரி வீரபாண்டியன், வளர்மதி சரவணன், இளம்பரிதி, வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதி, சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.