• Wed. Apr 24th, 2024

தேனி: ‘ தகாத உறவு’ கொலையில் முடிந்தது

போடியில் பெண் வனக் காவலரை கொலை செய்த, மதுரை பட்டாலியன் பிரிவு போலீஸ்காரர், கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

தேனி மாவட்டம், போடி தென்றல் நகர் தெற்கு தெருவில் வசித்தவர், சரண்யா 27. சில ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் பொண்ணு பாண்டி இறந்து விட்டார். இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தேனியில் வனக்காவலராக சரண்யா, பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்த ஊர் மதுரை. குழந்தைகள் தாய் பராமரிப்பில் உள்ளனர். போடி தென்றல் நகர் தெற்கு தெருவில் சரண்யா, தனியாக வசித்து வந்தார். கணவனை இழந்த சரண்யா, மதுரை பட்டாலியன் பிரிவு போலீஸ்காரர் திருமுருகன் 37, என்பவருடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார். இந்நிலையில், திருமுருகன் நேற்று காலையில் சரண்யாவை சந்திக்க, போடிக்கு வந்துள்ளார். இன்று (பிப்.12) காலையில் சரண்யா அவரது வீட்டில் ‘நைட்டி’ உடையில் பிணமாக கிடந்தார். அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போடி டி.எஸ்.பி., அண்ணாத்துரை (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேதை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த, மோப்பநாய் அங்குமிங்கும் ஓடி கடைசியாக போடி பஸ் ஸ்டாண்டில் நின்றது. இதனால், சரண்யாவை கொலை செய்த குற்றவாளி பஸ் ஏறி, வெளியூர் தப்பியோடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், எப்படியும் போலீசாரிடம் மாட்டிக் கொள்வோம், என்ற பயத்தில் திருமுருகன், மதுரை கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இத்தகவல் உடனே போடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து கண்டறிய போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *