ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், திரையரங்குகள் மற்றும் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு (நவ.30) அல்லது நாளை ஞாயிறு (டிச.1) ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து திரையரங்குகளும் இன்று இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் அறிவித்துள்ளார். அந்த வகையில், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு மழை பாதிப்பு இருக்கக் கூடிய மாவட்டங்களில் மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.