• Thu. Mar 28th, 2024

ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பேட்டி

Byp Kumar

May 18, 2023

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் பேட்டி
மதுரையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது 17 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தனியார் அமைப்பு சார்பில் தடை கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது அதேபோல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை விலங்குகள் பட்டியல் சேர்க்கப்பட்ட போது தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடந்த அனுமதி பெற்று தந்தார்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டமாக உருவாகியது அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது இந் நிலையில் 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒன்பது நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து இன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்ற தீர்ப்பு வழங்கி உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *