• Mon. Oct 7th, 2024

ஜல்லிக்கட்டு தீர்ப்பு -அவனியாபுரத்தில் கொண்டாட்டம்

ByKalamegam Viswanathan

May 18, 2023

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அவனியாபுரம் கிராம கமிட்டியினர் கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் சடை உத்தரவு வழங்க கோரி மனுஷி இருந்தது அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சிறப்பு சட்டம் செல்லும் என்றும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் எனக் கூறியும் உத்தரவு வழங்கியது.


ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற, தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என்றும் சட்டமன்றத்தின் உரிமையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனவும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முழு உரிமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதனை ஒட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி சார்பாக பட்டாசு வைத்தும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு வழங்கியும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *