• Wed. Feb 19th, 2025

உடைந்தது சூரியன் …. பூமிக்கு ஆபத்தா?-வீடியோ

ByA.Tamilselvan

Feb 12, 2023

சூரியனின் ஒரு பகுதி உடைந்ததால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் வீடியோ காட்சிகளையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று, ஐரோப்பாவும் சூரியனை பற்றி அறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக நாசா அமைப்பு, பார்க்கர் சோலார் புரோப் என்ற பெயரிலும், ஐரோப்பிய அமைப்பு சோலார் ஆர்பிட்டர் என்ற பெயரிலும் திட்டங்களை செயல்படுத்தி, விண்வெளி வானிலை உள்ளிட்ட விசயங்களை பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது எப்படி நடந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் ஒருபுறம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, இன்னொரு புறம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக பதிவு செய்யப்பட்ட அந்தக் காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.