• Sun. Mar 16th, 2025

துருக்கி, சிரியாவில்28 ஆயிரத்தைக் கடந்தது பலி ..மேலும் அதிகரிக்ககூடும்

ByA.Tamilselvan

Feb 12, 2023

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர் .பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கம் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.