• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,

வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த திருக்கல்யாண ஊர்வலத்தில்மாணவிக்யுசனா என்பவர் தத்துரூபமாக பச்சைக்கிளி நாயகி பவளவாய்பேரழகி அன்னை மீனாட்சி போல் வேடமனிந்து பக்தர்களை கவர்ந்தார்.

இந்த ஊர்வலம் தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர் கோயில்முன்பிருந்து மேளதாளம் முழங்க தாரை தப்பட்டை அதிரடியில் பெண்கள் முளைப்பாரியுடன் 2 கிலோமீட்டர் பாதயாத்திரையாக நடந்து சென்றனர். இதில் மாணவி க்யுசனா கையில் கிளியை பிடித்த நிலையில் 3 மணிநேரம் ஊர்வலத்தில் உற்சவ சிலை முன்பு அமர்ந்து வந்து பக்தர்களை வியக்க வைத்தார்.