• Fri. Mar 24th, 2023

18ஆம் தேதி துவங்கக்கப்படும் இன்னுயிர் காப்போம் திட்டம்

Byமதி

Dec 7, 2021

தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க ‘இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ அவசர உதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

அதாவது விபத்து நிகழ்ந்த உடன் அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் கொண்டு சேர்க்க வேண்டும். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் ஊக்கப் பரிசாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 610 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 205 அரசு ஆஸ்பத்திரிகள், 405 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகும். சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும்.

இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரி மைதானத்தில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதையொட்டி விழா நடைபெறும் இடம், மேடை அமைக்கும் இடம், விழாவுக்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *