



இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அனைவரும் அவரவர் இல்லங்களில் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பல்வேறு பழங்களை வைத்து வழிபடுவர். அதே போன்று அனைத்து கோவில்களிலும் இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலை கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சித்திரக்கனியை முன்னிட்டு முக்கனிகளான மா, பலா, வாழை உட்பட அண்ணாச்சி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆப்பிள் உள்ளிட்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டன் எடை கொண்ட பழங்களால் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களும் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோன்று கோவையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

