• Mon. Apr 28th, 2025

புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட கோவை குற்றாலம்

BySeenu

Apr 13, 2025

புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட கோவை குற்றாலத்தில், ஒரே நாளில் 4,500 சுற்றுலா பயணிகள் குவிந்து. குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி, சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். இன்று ஒரே நாளில் 4,500 பேர் குளித்து மகிழ்ந்தனர்.

கடந்த 9.4.2025 தேதியில் இருந்து சாலை பராமரிப்பு பணிகளுக்காக நேற்று வரை 4 நாட்களாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம். இன்று முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது. மேலும், கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் மிதமான அளவில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டன.

கோவை குற்றாலம் இன்று புதுப்பொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4,500 பேர் நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே சென்று அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இது, கோவை குற்றாலத்தின் மீதான மக்களின் ஆர்வத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது. கடந்த 4 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டு இருப்பது உள்ளூர் மக்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீரமைப்புப் பணிகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட சூழல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,

இனி வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்க துவங்கியதால், கோவை குற்றாலத்திற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கோவை குற்றாலத்தை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.