• Fri. Apr 18th, 2025

காட்டூர் முத்துமாரியம்மனுக்கு தன அலங்காரம்..,

BySeenu

Apr 14, 2025

தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி தினத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்டது. மேலும் முத்துமாரி அம்மனுக்கு தங்க நகைகளால் தன அலங்காரம் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு நான்கு கோடி ரூபாய் ஆகும்.

தன அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மனை பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டது.