• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காவலர்களுக்கு கண் சிகிச்சை முகாம் …

கோயமுத்தூர் போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பாக
காவலர்களின் உடல்நலம் மற்றும் பார்வை திறன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் Aalaya Eye Care மற்றும் Agarwal Eye Hospital ஆகியவற்றுடன் இணைந்து காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் லஷ்மி மஹால், போத்தனூரில் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமை காவல் ஆய்வாளர் அசோக் குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து காவல்துறையினரின் உடல்நல பாதுகாப்பு மற்றும் கண் பார்வை பராமரிப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

முகாமில் காவல்துறையினருக்கு முழுமையான கண் பரிசோதனை, பார்வைத்திறன் மதிப்பீடு, கண் அழுத்த பரிசோதனை, கண் உலர்வு பரிசோதனை, பார்வை குறைபாடு கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள், நீண்ட நேர கணினி பயன்பாடு மற்றும் இரவு ரோந்து பணிகளின்போது கண்களை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர். தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை மற்றும் கண்ணாடி பரிந்துரைகளும் வழங்கப்பட்டது.

இம்முகாமில் கோயம்புத்தூர் மாநகர காவல்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். காவலர்களிடையே இம்முகாம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், உடல்நல பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.