• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

ByA.Tamilselvan

Sep 25, 2022

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு குறித்து அதன் தலைவர் சுப்பாரெட்டி அறிக்கை வெளிட்டுள்ளார்.
திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு தலைவர் சுப்பா ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர், “திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 இடங்களில் உள்ள சொத்துக்களின் மதிப்பு 85,705 கோடி ரூபாய். தேவஸ்தானத்துக்கு சொந்தமான எந்த சொத்தையும் விற்கக் கூடாது என கடந்த 2014-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதையொட்டி, கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.