தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம் – ஆட்டோ ஓட்டி மகிழ்வித்த துணைப் பொதுச்செயலாளர் மின்னல் குமார்
பல்லாவரம் பம்மல் அண்ணா சாலை பகுதியில் பம்மல் பகுதி 6 வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் ப்ளாரன்ஸ் தாசரி ராஜசேகர் சார்பில் 100 ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை செய்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லாவரம் மற்றும் பம்மல் பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களது ஆட்டோக்கள் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆட்டோவிற்கும் தனித்தனியாகப் பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், வாழ்த்து வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பூஜைக்கு தேவையான பொருள்கள் மற்றும் நிதி உதவியும் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மின்னல் குமார், ஆட்டோ ஒன்றைத் தானே ஓட்டி ஆட்டோ ஓட்டுநர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் விழாக்கோலம் நிலவியது.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உழைப்பையும் மதிக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

உடன் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கே. வி சுனிதா ரமேஷ், பம்மல் பகுதி நிர்வாகிகள் சத்யா, மணிகண்டன், பிரவீன் குமார் நேசன் கதிரவன், ஜெகதீஷ், சங்கர நாராயணன், ராகுல், அருண், வீரபத்திரன், அருண், கார்த்திக், விஜய், பிரவீன் குமார், அரவிந்தன் தில்லை ராஜா ஆர் டி பம்மல் பிரபா லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…



