புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கமலா மாலா திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1,384 பயனாளிகளுக்கு ரூ.4.38 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் ஆகியோர் இன்று (21.10.2026) வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள், முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஹெச்.எம்.குழந்தைசாமி அவர்கள், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ப.கோகுல்சிங்; அவர்கள், வட்டாட்சியர் திருமதி.ஜெயபாரதி அவர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விராலிமலையில் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய பின்னர் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.



