• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கரப்பான் பூச்சியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள்..,

ByKalamegam Viswanathan

Oct 21, 2026

இந்தியாவை சீர்குலைக்க சில வெளிநாட்டு சக்திகள் அபிஜித் திப்கே தலைமையிலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முதலில் நீட் தேர்வு இப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது. இடதுசாரி மாணவர் அமைப்பு தலைவர் நேஹா போரா நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் நடந்தது போல ஆட்சி மாற்றம் இந்தியாவில் நடக்கும் என்கிறார்.

கரப்பான் பூச்சிக்கு அமெரிக்காவில் இருந்த குறிப்பிட்ட சில நிறுவனங்கள் உதவி செய்வதாக அமெரிக்க பாடகி மேரி மில் பென் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் கசாப்பிற்கு கருணை மனு போட்ட வழக்கறிஞர் பிருந்தா தாஸ் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு வழக்கறிஞராக ஆஜராகிகிறார். நம் இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடி மாண்பை காக்க வேண்டும். ஆனால் இன்று கரப்பான் பூச்சி தேசத்திற்கு எதிராக தேசிய கொடியின் மாண்பை சீர்குலைத்து வருகிறது.

நாட்டின் ஒற்றுமை சீர்குலைக்கும் கரப்பான் பூச்சி தீயசக்தியின் சதிவலைகளில் ஜென் ஜி இளைஞர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை இந்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக வழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் மேலும் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் மேலும் சமூக வலைதளங்கள் வங்கி கணக்குகள் மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கப்பட வேண்டும். போராட்டங்களில் ஈடுபடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.