• Fri. Apr 19th, 2024

நேபாளத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து…

Byகாயத்ரி

Sep 24, 2022

நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.நேபாள நாட்டில் பக்மதி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து பிர்கஞ் பகுதிக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் பலியான இந்தியரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த 25-வயதான அந்த இளைஞரின் பெயர் ஷரன் நாரயணம் சர்மா ஆவார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியரின் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *