நாஜிப்படையை உருவாக்கும் திட்டம் தான் அக்னிபாதை திட்டம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யின் தலைவருமான எச்.டி. குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ராணுவத்திற்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் ‘அக்னி பாதை’ நியமனங்களின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்-ஸின் நாஜி படையை அமைக்கும் மறைமுகத் திட்டம் உள்ளதாக எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமூகத்தை ராணுவமயமாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டங்களின் ஒருபகு தியாகத்தான் ‘அக்னிபாத்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பலரும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வரு கின்றனர்.
கர்நாடக முன்னாள் முதல்வ ரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யின் தலைவருமான எச்.டி. குமார சாமியும் தற்போது இதே குற்றச் சாட்டை கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக குமாரசாமி செய்தி யாளர்களிடம் கூறியிருப்பதாவது: “அக்னிவீரர்களை தேர்ந்தெடுப்பது ஆர்எஸ்எஸ் அமைப்பா அல்லது இந்திய ராணுவமா என்ற கேள்வி உள்ளது. 10 லட்சம் அக்னிவீரர்களை தேர்ந்தெடுப்பது யார்? உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 லட்சத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டமே இருக்கும். 2.5 லட்சம் பேர் அக்னிபாத்தில் தேர்ந் தெடுக்கப்படுவார்கள், பின்னர் அவர்கள் ஆர்எஸ்எஸ்-காரர்களாக இருப்பார்கள். இது ஆர்எஸ்எஸ்-ஸின் மறைமுகத் திட்டம். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே அனுப்பப்படும் மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் நாடு முழுவதும் பரவுவார்கள். இந்தியாவில் ஒய்வு பெற்ற 75 சதவிகித அக்னி வீரர்களை ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும். இது நாஜி படையைப் போல் இருக்கும். ஆர்எஸ்எஸ் இந்தியாவில் நாஜி இயக்கத்தை கொண்டு வர முயற்சிக் கிறது. இதற்காகத்தான் அவர்கள் அக்னிபாதை திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு எச்.டி. குமாரசாமி தெரி வித்துள்ளார்.