• Sat. Sep 23rd, 2023

மறுகூட்டலுக்கு வரும் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வுகள் இயக்ககம்

Byகாயத்ரி

Jun 22, 2022

இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் ஜூன் 24 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed