

கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 17ஆம் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.இதில் பள்ளி வாகனங்கள், காவல்துறை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 302 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ ஆதாரங்களை வைத்து கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கலவரத்தின் போது பள்ளியில் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவரை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.