
சென்னையில் நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு இபிஎஸ் அதிமுகவை அழிக்க முடியுமா என கேள்வி..
மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இபிஎஸ்.. அதிமுகவின் மாபெரும் போராட்டத்தை கண்டு ஸ்டாலின் நடுங்கி கொண்டிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்வதை விட்டு அவர் அதிமுகவை அழிக்க பார்க்கிறார். திமுக அழிக்க நினைத்த போதெல்லாம் வீறு கொண்டு எழுந்து ஆட்சியை பிடித்ததே அதிமுகவின் வரலாறு.கருணாநிதியாலேயே அழிக்க முடியவில்லை ஸ்டாலினால் முடியுமா? என்று சவால் விட்டுப்பேசினார்.
