• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இலங்கை மக்களிடம் சுமூகமாக நடக்க வேண்டும்- ஐ.நா. சபை

Byகாயத்ரி

Apr 6, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள். இது தொடர்பாக ஐ.நா. சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல. சிங்கள படைகள் அப்படி அத்துமீறி நடந்துகொள்ளக் கூடாது. கோபத்தில் இருக்கும் மக்களிடம் சுமூகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும். எதிர்க்கட்சிகள் மக்களிடம் போராட்டத்தை தூண்டிவிட செய்யக்கூடாது. அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா.சபை அறிவுறுத்தியுள்ளது.