வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்து விட்டு இன்று அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைக்கு திரும்பினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகருக்கு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் தேரோட்டத்துடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 14ஆம் தேதி மலையில் இருந்து மதுரைக்கு வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்த எதிர்சேவை கோலாகலமாக நடைபெற்றது.
சனிக்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் கள்ளழகர் வைகையில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசனம் செய்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தத்கள் மதுரையில் குவிந்தனர். வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்ததை விட மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது.
தீர்த்தவாரிக்கு பின்னர் ஆற்றங்கரை வழியே வண்டியூர் சென்று வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்கினார். அங்கு கள்ளழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அங்கிருந்து புறப்பட்ட அழகர், கள்ளழகர் தேனூர் மண்டபத்திற்கு சென்று அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு மாலையில் சாபவிமோசனம் அளித்தார். தவளையாக இருந்த தவம் செய்து வந்த முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை விளக்கும் வகையில், சிறிய குளமும் அதில் முனிவரின் உருவம் போன்ற பொம்மையும் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் வகையில் அங்கிருந்து நாரைகொக்கு வானில் பறக்கவிடப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். 62 ஆண்டுக்கு பின்னர், தேனூர் மண்டபத்தை கள்ளழகர் பெருமாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அன்றைய தினம் இரவு ராமராயர் மண்டபத்தை வந்தடைந்த அழகர், அங்கு விடிய, விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மட்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி கொடுத்த அழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் ஏகாந்த சேவையில் காட்சியளித்தார் கள்ளழகர். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமஞ்சனமான அழகர் அதிகாலையில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். கருப்பணசாமி கோயில் சன்னதி அருகே காட்சியளித்தார். கருப்பணசாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியான உடன் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் சேவை செய்து பிரியாவிடை கொடுத்து வழியனுப்பினர்.
புதூர், மூன்றுமாவடி வழியாக சுந்தராஜன்பட்டி சென்றடைந்து அங்குள்ள மறவர் மண்டகப்படிக்கு இன்று இரவு சென்றடைகிறார். அழகர் மதுரை வரும்போது எப்படி எதிர்கொண்டு அழைக்கின்றனரோ அதேபோல அவர் மலைக்கு திரும்பும் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழியனுப்புவது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.அப்பன்திருப்பதியில் இன்று இரவு திருவிழா நடக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று அழகருக்கு அங்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. இனி அழகர் மதுரைக்கு வர ஒரு வருஷம் ஆகுமே என்பது மதுரைவாசிகளின் ஏக்கமாக மாறி விட்டது.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]