• Fri. Apr 19th, 2024

திருப்பதி ஏழுமலையானின் காலை முதல் இரவுவரை‘மெனு’

ByA.Tamilselvan

Apr 26, 2022

உலகின் பணக்கார கடவுளான ஏழுமலையானை தினமும் பல ஆயிரம் பேர் தரிசனம் செய்கின்றனர்.திருப்பதி ஏழுமலையானுக்கு காலை முதல் இரவு வரை பல்வேறு பூசைகள் நடைபெற்றுவருகின்றன.சுப்ரபாத்துடன் துயில் ஏழும் ஏழுமலையானுக்கு இரவு திருவீசம் என்னும் அன்னம் படைக்க படுகிறது. ஏழுமலையானின் தினசரிமெனு என்ன என பார்க்கலாம்..
அதிகாலை சுவாமியை சுப்ர பாதத்துடன் துயில் எழுப்பிய பின்னர், அவருக்கு வெண்ணெய், நுரை ததும்ப பசும்பால் படைக்கப்படுகிறது. தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை சேவைகளுக்குப் பிறகு சுவாமிக்கு எள், சுக்கு, வெல்லம் கலந்த பானகம் சாத்துபடி. இவைகளைத் தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் பால போக நைவேத்தியமாக புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், ரவா கேசரி சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் சர்வ தரிசனம் தொடங்கும். நண்பகல் 11 மணியில் இருந்து 11.30 மணிக்குள் ராஜ போகம் நைவேத்தியம். இதில், வெண் சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம், போன்றவை படைக்கப்படுகிறது. மாலை 7 மணியளவில் சயன போக நைவேத்யத்தில் மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை மற்றும் பல காய்கறிகளால் சமைக்கப்பட்ட அன்னம் சமர்ப்பிக்கப்படும்.
இத்துடன் ஏழுமலையானின் ‘மெனு’ முடியவில்லை. இரவு ‘திருவீசம்’ எனும் பெயரில் வெல்லத் தால் தயாரிக்கப்பட்ட அன்னம் படைக்கப்படும். பின்னர் சுவாமி பள்ளியறைக்குச் செல்லும் முன் ஏகாந்த சேவையின்போது, நெய்யினால் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி மற்றும் பழங்கள், பால் போன்றவை சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் இவை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *