• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் எஸ் ஆர் வி நகரில் ஆஷாட நவராத்திரி உற்சவ விழா..,

ByKalamegam Viswanathan

Jul 21, 2026

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டி எஸ் ஆர் வி நகர் தாழம்பூ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடத்தின் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஸ்ரீ ராஜசியாமளா மஹா வாரஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இங்கு ஆஷாட நவராத்திரி உற்சவ விழா மஹா வராஹி நவராத்திரி திருவிழா பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து முதல் நாள் பச்சை சாற்றியும், இரண்டாம் நாள் மஞ்சள் காப்பு, மூன்றாம் நாள் குங்குமகாப்பு, நான்காம் நாள் சந்தன காப்பு, ஐந்தாம் நாள் பால்கோவா காப்பும், ஆறாம் நாளான இன்று புஷ்பாங்கி சேவை நடைபெற்றது. முன்னதாக உற்சவர் வராகி அம்மனுக்கு குங்குமம் சந்தனம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் புஷ்ப அலங்காரம் நடைபெற்று மூலவர் வாராஹி அம்மனுக்கும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் மூலவர் அம்மனுக்கு பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன.

புஷ்பா அலங்காரத்தில் எழுந்தருளிய வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க அம்மனை தரிசனம் செய்தனர். அபிஷேக நிகழ்வுக்காக பக்தி இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.