• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்…,

BySeenu

Jul 22, 2026

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்.
திடீர் கண்டன ஊர்வலத்தால் கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள BSNL அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்ததனர் அப்போது பேசிய அவர்கள்.கடந்த ஜூன் 20 முதல் ஒன்றிய கல்வி அமைச்சரின் வீட்டின் முன் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாசிங்க் உள்ளிட்ட மாணவர்களை டெல்லி காவல்துறை கொடூரமான முறையில் தாக்கி கைது செய்துள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, கோவையில் DYFI மற்றும் SFI அமைப்புகள் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் போராட்டத்திற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பாராளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் போராடச் சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மருத்துவக் காவலில் வைக்கப்பட்டுள்ள சோனம் வாசிங்க் உள்ளிட்ட மாணவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்திய நாட்டின் கல்வியைப் பாதுகாக்கவும், மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.