விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது ட்வீட்டர் பக்கம் மூலம், தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில்,”மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை திருப்பூரில் உள்ள ஶ்ரீ சக்தி சினிமா தியேட்டரில் தேசவிரோத பாஜக மற்றும் சங்பரிவாரக் கும்பல் திரையிட்டு இசுலாமியருக்கு எதிராக கூச்சலிட்டு உறுதிமொழி ஏற்றுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் மத வன்முறையை பரப்ப திட்டமிட்டுள்ளது. ஆகவே,தமிழ்நாடுஅரசு இத்திரைப்படத்தை தடை செய்யவேண்டும்.
சமூக அமைதியை பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு தியேட்டர் அதிபர்கள் இத்திரைப்படத்தை திரையிடக்கூடாது; என்றைக்கும் ஒத்துழைக்கக்கூடாது. பொய், வதந்திகளை மட்டுமே பரப்பும் மோடி போன்ற பிரதமர்களால் நாடு அவமானமடைகிறது” என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.