கர்நாடகாவில், கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வர தொடங்கினர். இது சீருடை விதியை மீறும் செயல் என பள்ளி நிர்வாகம், இவர்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்காததை அடுத்து ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அதிரடி தீர்ப்பை வழங்கியது. கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை என்று கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என்று தெரிவித்த கர்நாடக உயர்நீதிமன்ற சட்ட அமர்வு, ஹிஜாபுக்கு தடை விதித்தது செல்லும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் வந்துள்ளது. சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்குமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பை வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவர்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க, பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தது.