• Fri. Mar 31st, 2023

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் பள்ளி தேர்வுகள் ரத்து

பொருளாதார நிலை மந்தம் காரணமாக பேப்பர், மை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உலக நாடுகள் பெரும் இழப்பையும் அழிவையும் சந்தித்து வருகிறது. இதில் பெரும்பாலான நாடுகள் மீண்டுவரத்தொடங்கியுள்ளன. சில நாடுகள் அதன் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. அந்த வகையில் இலங்கை பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது.

இதனால் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஏற்கனவே பெற்றிருந்த கோடிக்கணக்கான கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கும் இலங்கை உள்ளானது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டுக்கு சுமார் 6.9 பில்லியன் பில்லியன் டாலர் (ரூ.52 ஆயிரம் கோடி) கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இது, அந்நாட்டில் கடுமையான பணவீக்கத்தை உருவாக்கியுள்ளது.

இலங்கையின் கையிருப்பில் இருந்த அந்நிய செலவாணியும் பாதிக்கும் கீழாக குறைந்திருக்கிறது. இறக்குமதி செய்ய கூட பணம் இல்லாததால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போதிய நிதி இல்லாததால் தாள்களை அச்சிடவும், இறக்குமதி செய்யவும் இலங்கை அரசு திணறி வருகிறது. தாள்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவிருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேப்பர், மை இல்லாமல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், இலங்கையில் உள்ள பொருளாதார நிலை எந்த வகையில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *