சத்தியமங்கலம் அருகே காட்டுயானை கார் பயணிகளை துரத்த உயிர் பயத்தில் கதறியுள்ளனர். ஓருவழியாக தப்பினர் என்பது சந்தோச செய்தி.
5 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்று சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக அவர்கள் கார் சென்றபோது திடீரென காட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட யானை ஒன்று அவர்களது காரை துரத்த ஆரம்பித்தது.
யானை துரத்தியதும் காரிலிருந்த நண்பர்கள் உயிர் பயத்தில் கதறியுள்ளனர். பின் ஒருவழியாக சுதாரித்து கொண்டு ரிவர்ஸ் கியரிலேயே பின்னோக்கி காரை ஓட்ட ஆரம்பித்த அவர்கள் யானையிடமிருந்து ஒருவழியாக தப்பித்தனர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.