• Fri. Apr 26th, 2024

பீர் குடிப்பவர்களுக்கு நீரிழிவு ,இதயநோய் வாய்ப்பு குறைவு

ByA.Tamilselvan

Jul 6, 2022

குடி குடியை கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வடக்கு போர்ச்சுக்கல்லில் உள்ள போர்ட்டோ நகரில் சுகாதார தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையம் 23 வயதில் இருந்து 58 வயதுக்குட்பட்டவர்கள் சிலரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதாவது தொடர்ந்து 4 வாரங்கள் அவர்களை ஆல்கஹால் இல்லாத 330 மில்லி கிராம் பீரை குடிக்க வைத்தனர். இதில் அவர்களுக்கு நுண்ணுயிரிகளின் செயல்பாடு மேம்பட்டது தெரிய வந்தது. இந்த நுண்ணுயிரிகள் நீரிழிவு, இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால் தான் இதுபோன்ற செயல்பாடுகள் உடலில் நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஆல்கஹால் கலந்த பீரை சாப்பிடுவதால் இந்த நன்மை எதுவும் கிடைக்காது என அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *