பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை ஆளும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து இணையத்தின் வாயிலாகவும் ட்விட்டர் வாயிலாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருபவர் சவுக்கு சங்கர்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளில் ஊழல்கள் மற்றும் விதிமீறல்கள் போன்றவற்றை பற்றி பொதுவெளியில் பேசி வருகிறார்.
இதனால், இவர் மீது பல அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். சமீபத்தில் ட்விட்டரில் ஆர்டலி முறை பற்றி அதிகமாக பேசி வந்தார் சவுக்கு சங்கர். மேலும் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அரசு வாகனங்களை பயன்படுத்தி வருவதையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இதனால் கோபமடைந்த அரசு அதிகாரிகள் காவல்துறையை நாடியுள்ளனர் என்றும், இதனால் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தை காவல்துறை முடக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சவுக்கு சங்கர் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளதாகவும் கூறப்படுகிறது.