• Thu. Apr 18th, 2024

அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு..!
கொதிப்பில் அரசு ஊழியர்கள்..!

Byவிஷா

Aug 14, 2022

தமிழக ஆசிரியர் கூட்டணி பணி நிறைவு பாராட்டு விழா, ஜாக்டோ ஜியோ சிறை சென்ற இயக்க உறவுகளுக்கு பாராட்டு விழா மற்றும் இயக்க ஆண்டு விழா என முப்பெரும் விழா திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியர் அவர்
“தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாத காலம் ஆகிவிட்டது ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சம் பேர் எங்கள் குடும்பத்தார்கள் ஒரு கோடி வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். நன்மை செய்ய வேண்டிய அரசு வரவேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள் அதன் கீழ் ஆட்சி அமைந்தது.
ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை 15 மாத காலமாகியும் நிறைவேற்றவில்லை. எல்லா நலத்திட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு எந்த சலுகைகளையும் இதுவரையும் வழங்கவில்லை இதுகுறித்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதலைமைச்சர் நடைமுறைபடுத்த வேண்டும். 37 ஆயிரம் கோடி நிதி ஓதுக்கியுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2,700-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சரியில்லை என இடித்து தள்ளி விட்டார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய மாணவர்களின் கல்வி மரத்தடியிலும், கோயில் வளாகத்திலும், நடைபெற்று கொண்டிருக்கிறது.
அரசு பள்ளியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. மூன்று வகுப்புகளை ஒரே ஆசிரியர் நடத்தி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. சில பள்ளிகளில் ஐந்து வகுப்பையும் ஒரே ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் 80 சதவீத பள்ளியில் ஓர் ஆசிரியர் இரு ஆசிரியர் பள்ளிகளாக தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட தமிழகத்தில் 17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது ஆசிரியர் இல்லை மாணவ மாணவிகள் தான் இருக்கிறார்கள் . காலை சிற்றுண்டி வழங்கியும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாடட’ நடத்துவதற்கு ஆசிரியர் இல்லை எனவே ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் புதிய கல்விக் கொள்கையை வேண்டாம் என சொல்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வேறு வழியில் தலை தூக்கி வருகிறது” இவ்வாறு கூறினார்.
ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்து அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *