

தமிழக அரசு இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக கொண்டாட அறிவுறுத்தி இருந்தது. மேலும் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றியும் பள்ளி கல்லூரிகள் ,அரசு அலுவலகங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது .


அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்களும் மின்விளக்குகளால் வண்ணமயமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையாக மூவர்ண மின்விளக்குகளால் பள்ளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இதனை கிராம பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர் . மேலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
