அமைதியை விரும்பும் கட்சி பாஜக என அண்ணாமலை பேட்டி.
காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது…
நிதியமைச்சர் கார் மீதான செருப்பு வீச்சு சம்பவம் விரும்பத்தகாத ஒன்று .அதனை ஒரு போதும் பாஜக நியாயப்படுத்தாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவிற்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. அமைதியை விரும்பும் கட்சியான பாஜகவில் இது போல் நடந்தது வருத்தமளிக்கிறது. நாம் முன்பே விமானநிலையம் வந்திருந்தால் சம்பவம் நடக்காமல் தடுத்திருப்பேன் என்ற அவர் செருப்பு வீசியதாக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகள் என்றும் கூறியுள்ளார்.
அமைதியை விரும்பும் கட்சி பாஜக- அண்ணாமலை
