• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

தொழிலாளர் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களைக் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

May 1, 2022

ஒரே ஆண்டில் தொழிலாளர் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாக திமுக அரசு விளங்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக உழைப்பாளர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த #MayDay வாழ்த்துகள். ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் தொழிலாளர் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். தொழிலாளர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு, அவர்களை வாழவைக்கும் அரசாகவும் கழக அரசு என்றுமே விளங்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.