நாட்டின் பாதுகாப்பை முப்படைகளும் இணைந்து உறுதி செய்வோம்என்று புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே உறுதி அளித்துள்ளார்.
ராணுவ தளபதியான முகுந்த் நரவனே பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்.
1965-ம் ஆண்டு நாக்பூரில் பிறந்தவர் மனோஜ் பாண்டே, 1982-ம் ஆண்டு முதல் ராணுவத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றினார். பின்னர் லடாக் எல்லை, அந்தோமான் நிக்கோபர் பிராந்திய தளபதியாகவும் மனோஜ் பாண்டே பணிபுரிந்தவர். சில மாதங்களுக்கு ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராணுவ தளபதி முகுந்த் நரவனே ஓய்வு பெற்றதால் தற்போது மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியிருப்பதாவது: புவிசார் அரசியல் சூழ்நிலைகள் படிப்படியாக மாறி வருகின்றன. நம் முன்னர் ஏராளமான சவால்கள் உள்ளன. எந்த ஒரு சவாலான நிலைமையையும் எதிர்கொள்வது என்பது இந்திய ராணுவத்தின் கடமை.
எனக்கு முன்னைய ராணுவ தளபதிகள் மேற்கொண்டிருந்த பணிகளை முன்னெடுத்து செல்வேன். . நாட்டின் பாதுகாப்பை முப்படைகளும் இணைந்து உறுதி செய்வோம். நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றிருப்பதை பெருமைக்குரிய தருணமாக கருதுகிறேன். இவ்வாறு மனோஜ் பாண்டே கூறினார்.