விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துர் ஒன்றியம், கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 20 ஆண்டுகள் செயல்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, மீண்டும் கோட்டைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வட்டாட்சியர் அவர்கள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி கட்டிடம் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் கூறினார். 70 பெற்றோர்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்ததின் அடிப்படையில் வட்டாட்சியர் மீண்டும் பள்ளியை இயக்குவதற்கு கருத்து கேட்பு நடத்தப்பட்டு மனு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் பள்ளியை மீண்டும் திறப்பதற்கு உறுதி அளித்துள்ளார்.