தமிழகத்தில் வரும் 23 ந் தேதி வாக்குப்பதிவும், வரும் 4 ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற சூழலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில்

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாமரத்துப்பட்டி, பட்டறைத் தெரு,மேலப்புதூர், அருணாச்சலம்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் வேட்பாளர் ஐ. மகேந்திரன் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள், திமுக அரசு முடக்கிய அதிமுக திட்டங்கள் அதிமுக ஆட்சி அமைந்த உடன் செயல்படுத்தப்படும் என எடப்பாடியார் முதலமைச்சராக பதவியேற்ற உடன் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ 10 ஆயிரம் வழங்கப்படும், முதியோர் ஓய்வூதியம் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக மாமரத்துப்பட்டி மாரியம்மன் கோவிலில் அதிமுக வெற்றி வேட்பாளர் ஐ.மகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிமுக வேட்பாளர் ஐ. மகேந்திரனுக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் நகரச் செயலாளர் பூமாராஜா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மகேந்திர பாண்டி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.,




