• Fri. Mar 29th, 2024

ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டி

ByKalamegam Viswanathan

Apr 2, 2023

ராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் இல்லத்தில் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ புத்தாடைகளை வழங்கினார் – பின்னர் அவர் அளித்த பேட்டியில்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டும் வராத தமிழகத்தில் சுங்க கட்டண உயர்வு என்பது இந்தியா முழுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு கடுமையான பாதிப்பை சுங்க கட்டண உயர்வு ஏற்படும்.விசாரணை கைதி பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையும் தமிழக முதல்வரும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட அதிகாரியை இடை நீக்கம் செய்வது மட்டுமின்றி அதிகாரியிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது.சென்னை ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல். சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்டு திரையரங்கில் அனுமதி மறுத்த செயலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெரியார் ஒழித்த இரட்டை குவளை முறை தீண்டாமை இன்னும் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.
அந்தக் காலத்தில் இருந்த தீண்டாமை குறித்து இன்றைய தலைமுறை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தீண்டாமை கடந்து வந்த பாதை குறித்து நினைவு கூறும் விதமாக கேரளாவில் நடக்கும் வைக்கம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வது பாராட்டுக்குரியது என கூறினார்.நிகழ்ச்சியில் கழக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன்.சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் தமிழ் மணிவிருதுநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் வினாயக மூர்த்தி ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன்தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன்பொதுக்குழு உறுப்பினர் ஞானகுரு,சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அயனப்பான், செட்டியார் பட்டி பேரூர் கழக செயலாளர் பாஸ்கர்,சேத்தூர் முன்னால் பேரூர் கழக செயலாளர் , ஜெயசங்கர்,ராஜபாளையம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ,பேரூர் கழக நிர்வாகிகள்,கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *