• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,

ByK Kaliraj

Apr 16, 2026

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்தது இனாம் மீனாட்சிபுரம் கிராமம்.இக் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இக்கிராமத்திற்கு அருகில் உள்ள வைப்பாற்றில் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மின் மோட்டார் பழுது காரணமாக சரி செய்யப்படாததால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என தெரிய வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இனாம் மீனாட்சிபுரம் கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் வெம்பக்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சங்கரன்கோவில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்கள் கோவில்பட்டியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக செல்லும் பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. வெம்பக்கோட்டை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் பொதும் மக்கள் பஸ் மறியலை கைவிடாததால் மாற்று வழியில் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. சாத்தூர் போலீஸ் துணை சூப்ரெண்டு குருசாமி வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் ,ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பஸ் மறியலை கைவிட்டு சென்றனர் . இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.