• Thu. Apr 25th, 2024

மின்னொளி கபாடி போட்டி! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்…,

Byதரணி

Apr 3, 2023

சிவகாசி, ஏப் 4; சிவகாசியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மின்னொளி கபாடி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்துவெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை வெற்றி கோப்பை வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் இணைந்து நடத்தும் சின்னமருது கபாடி குழு மற்றும் தெய்வத்திரு பன்னீர்செல்வம் கபாடி குழுவினர் நடத்தும் மாபெரும் முதலாம் ஆண்டு மின்னொளி கபாடி போட்டி சிவகாசி அருகே ரிசர்வ் லயன் மினி ஸ்டேடியத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி சங்க துணைத் தலைவருமான ராஜ்சத்யன் போட்டியை துவக்கி வைத்து வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு தொகை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

இன்றைக்கு உலக நாடுகள் விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் விளையாட்டுக்குத்தான் தனி மரியாதை. தமிழக அரசும் இந்திய அரசும் இதற்கு முன்னால் இருந்த அரசுகள் எந்த அரசாக இருந்தாலும் விளையாட்டுதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக நிதிகளை ஒதுக்கி விளையாட்டுதுறையை ஊக்கப்படுத்துவதே நம்முடைய நாடு முன்னணி நாடாக விளங்குகிறது. நம்முடைய கிராம பகுதியில் இன்னும் நமது பாரம்பரிய விளையாட்டு் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இந்த விளையாட்டுகள் மூலமாக இளைஞர்களுக்குள் ஒரு ஒற்றுமையும் ஒரு சமுதாய புரட்சியும் ஒரு சமுதாய ஒற்றுமை ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். அப்படிப்பட்ட விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்துவதுதான் அனைவரது நோக்கம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். விளையாட்டுகளை ஊக்கப்படுத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு நிதி உதவி செய்து உலக நாடுகள் மத்தியிலே தமிழக வீரர்களை கொண்டு சென்று சிறப்பு பெற செய்தார். அதற்கு பின்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். இப்படி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி விளையக்கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இங்கே வந்து விளையாடிய அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை சொல்லி விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த முறை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் என்று பேசினார்.

கபாடி போட்டியில் விருதுநகர், மதுரை தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் இருந்து 100 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் தமிழ்பாடி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முதல் பரிசாக 12 அடி கோப்பை மற்றும் ரூ.15,000ம், இரண்டாம் பரிசாக 10 அடி கோப்பை ரூ.12,000ம், மூன்றாம் பரிசாக 8 அடி கோப்பை ரூ.10,000 நான்காம் பரிசாக 6 அடி கோப்பை ரூ.8000 ஐந்தாம் பரிசு முதல் 8ம் பரிசு வரை 4 அடி கோப்பை ரூ.4000 9தாவது பரிசு முதல் 12ம் பரிசுவரை 2 அடி கோப்பை ரூ.2000 பரிசு தொகை வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் மணிகண்டன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் கெளரிசங்கர்,வண்டியூர் பகுதி கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாரீஸ்வரன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, கழகப் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நர்மதாஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜ், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் தங்கப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் குமரேசன், கூடலிங்க பாண்டியன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் வசந்தகுமார், மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வால்டர் என்ற பாலகணேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் பாலபாலாஜி, இளைஞரணி அஜய்கிருஷ்ணா, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்துமணிகண்டன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் முத்துராஜ், மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தொகுதி கணேசன். ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி, உட்பட மாவட்ட கழக, ஒன்றிய கழக, மாநகரக் கழக நிர்வாகிகள், சார்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கபாடி போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முனியசாமி, எம்ஜிஆர் மன்றம் ரமேஷ்கண்ணன் சிறப்பாக செய்திருந்தனர். சின்னமருது கபாடி குழு ஈஸ்வரன், தெய்வத்திரு பன்னீர்செல்வம் கபாடி குழு சிவபாலன் நன்றி கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *