கேரளாவில் தாய்க்கு 2 வது திருமணம் செய்துவைத்த மகள்செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மகளே தாய்க்கு 2 வது திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் வயது 59. பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது கணவர் இறந்துவிட்டார்.ரதிமேனனுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்குமே திருமணமாகி விட்டது. தன்தாயின் தனிமையை போக்க விரும்பிய மூத்த மகள் பிரசிதா அதே பகுதியைச் சேர்ந்த திவாகரன் வயது63 என்பவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திவாகரனும் மனைவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்!
