• Mon. Jan 20th, 2025

உ.பி லக்னோவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்!

ByA.Tamilselvan

Aug 20, 2022

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மற்றும் அதை ஒட்டிய பல மாவட்டங்களில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து உறுதி செய்த அதிகாரிகள், உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றனர். இந்த நிலநடுக்கம் அதிகாலை 1.12 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் மையம் நேபாளத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் 82 கி.மீ ஆழத்தில் இருந்தது.