திருவிழாக்களின் நகரம் மதுரை.கோயில்களின் நகரமான மதுரையில் வருடம் தோறும் 285 நாட்கள் திருவிழா நடக்கும் நகரம். அதில் முக்கிய நிகழ்வுவாக மீனாட்சி திருகல்யாணமும்,அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் முக்கியமானது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி துவங்கிய சித்திரைதிருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று ஏப்.16) நடைபெற்றது.
வழக்கமாகவே சுமார் 10 லட்சம் பேர் திரளும் இந்த திருவிழா. 2 ஆண்டு கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு நடைபெறுவதால் வழகத்தை விட அதிகமாகவே பக்தர்கள் திரண்டனர்.மதுரை மாநகரம் திக்குமுக்காடிப்போனது. எங்கு பார்த்தாலும் மனித தலைகள், கூட்டம் அலை மோதியது.ஆனாலும் கூட ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திலும் ஒரு ஆம்புலன்ஸிற்காக மதுரைக்காரர்கள் விலகி வழி விட்டதையும், அதே ஆம்புலன்ஸிற்காக அழகரையே நிறுத்தி வைத்ததையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இது மதுரைக்கு ஒரு பெருமைக்குரிய விஷயம் தான்.