

ஹரியானா வில் பிவானி என்னும் இடத்தில் இஸ்லாமியர்கள் வழிபாட்டுத் தளத்தில் முன்பு கோவில் இருந்ததாக கூறி இந்துமத அடிப்படை வாதிகள் ஹனுமன் சிலையை நிறுவியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி மிகபிரமாண்டமான ஹனுமன் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி
” இந்திய நாட்டின் 4 திசைகளிலும் ஹனுமன் சிலை நிறுவப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஷிம்லாவில் ஒரு சிலை ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டது. குஜராத்தில் இரண்டாவது சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு சிலைகள் ராமேஸ்வரத்திலும், மேற்குவங்கத்திலும் நிறுவப்படும். என பேசியுள்ளார். இந்த பேச்சு தமிழகம்,மற்றும் மேற்குவங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டெல்லியில் அனுமன் ஜெயந்தியின் போது சிலை வைப்பதில் இரண்டு பிரிவினர் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தி ய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இது போன்ற மோதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. தற்போது டெல்லியிலும் இரண்டு பிரிவினர் இடையிலான மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளது.இந்தியாவில் தற்போது மத ரீதியான, ஜாதி ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன. வெறுப்பு பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஹரியானா வில் இஸ்லாமியர்கள் வழிபாட்டுத் தளத்தில் அகற்றிவிட்டுவிஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்துமத அடிப்படை வாதிகள் ஹனுமன் சிலையை நிறுவியுள்ளனர். முன்பு விநாயகர்சிலையை வைத்து அரசியல் செய்தவர்கள் தற்போது அனுமனை வைத்து வன்முறை அரசியலை செய்கிறார்கள்.
