

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக, தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அநேக மாவட்டத்தில் இருந்தும் சுமார் 1800 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.


இந்த போட்டியானது வயது அடிப்படையின் பிரிவில் தனித்தனியே தனித் திறமை போட்டியாக நடைபெற்றது. இதில் ஒற்றை கொம்பு, இரட்டைக் கொம்பு, வேல்கம்பு, செடி குச்சி, சுருள்வால் போன்ற சிலம்ப கலையும் இதில் இடம் பெற்றன.



வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கண்ணன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன் ஆகியோர்கள் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.



