

இக்கட்டான தருணத்தில் உதவிவரும் இந்தியாவுக்கு நன்றி என இலங்கை அதிபர் விக்ரமசிங்கே பாராளுமன்றத்தில் பேசிய போது தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தேவையான உதவிகளை வழங்கியது. என்னுடைய மக்கள் சார்பாகவும் மற்றும் எனது சொந்த அடிப்படையிலும், பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இலங்கைக்கு ஒரு வலுவான மற்றும் பரஸ்பரம் அதிக பயனுள்ள நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காலத்தில் உதவி செய்து வருவதுடன், இலங்கைக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது என தெரிவித்தார்.