அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு கோஷ்டிகள் உருவாகியுள்ள நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் ஓபிஎஸை சந்தித்துவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ் மறறும் இ.பி.எஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு பின் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்
தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, சேலம் ரவி உள்பட ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.இந்தசந்திப்பு இபிஎஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் சந்தித்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்!
